கொரோனா எதிரொலி: சட்டசபை ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா தொற்று நோய் தாக்கத்தால் சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததால் தமிழக சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதற்கிடையில் நாளையுடன் சட்டசபை கூட்டம் முடிவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 396 பேர் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் 9 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை மார்ச் 31 வரை முடக்க தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கூட்டத்தொடரை ஒத்திவைக்குமாறு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.